கொவிட் -19 நெருக்கடியால் பிற்போடப்பட்ட க. பொ. த உயர் தரம், சாதாரண தரம், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான முன்மொழியப்பட்ட உத்தேச திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்தார்.
- தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகளை நவம்பர் 14 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை 2022 ஆண்டு பெப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கல்வி அமைச்சரின் அறிவுரையின் கீழ் முன்மொழியப்பட்ட திகதிகள் என்றும் இத் திகதிகளில் கோரிக்கைகள் மற்றும் சூழ்நிலைகளை பரிசீலித்த பிறகு இதில் மாற்றம் ஏற்பலாம்” என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இது தான் இறுதியான திகதி என்று உறுதியாக குறிப்பிட முடியாது என்றும் இவை முன்மொழியப்பட்ட உத்தேசி திகதிகள் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டார்.
இதேவேளை, பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட நோயெதிர்ப்பு பிரிவு பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவிக்கின்றார்.
பெரும்பாலான மேற்குலக நாடுகளில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிக்கின்ற போதிலும், பாடசாலைகள் திறக்கப்பட்டன என்று அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், 12 முதல் 18 வயதிற்குபட்டவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கிய பின்னர் பாடசாலைகளை திறக்க அனுமதி வழங்க முடியும் என்று தாம் நம்புவதாக சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.