ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்பதற்கு தான் தயார் என கருஜயசூரிய அறிவித்துள்ளார் என்று நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பொதுத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியின் பின்னர் கட்சி தலைமைப்பதவியை துறப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தார். இதனையடுத்து தலைமைப்பதவிக்காக அக்கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகின்றது.
இந்நிலையில் ஐ.தே.கவின் தலைமைப்பதவியை ஏற்குமாறு கருஜயசூரியவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவ்வழைப்பையே அவர் ஏற்றுள்ளார் என தெரியவருகின்றது.