ஐ.தே.க. அழிந்துவிடும்: மஹிந்த

தேர்தலை பிற்போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முற்பட்டால் அதுவே அக்கட்சிக்கு இறுதிப்பயணமாக அமைந்துவிடும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மஹிந்த மேலும் கூறியவை வருமாறு,

“ அரசமைப்பின் பிரகாரம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.அதனை பிற்போட முடியாது. அவ்வாறானதொரு முட்டாள்தனமான முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்காது என்றே நம்புகின்றேன். அவ்வாறு இறங்கினால் அதுவே அக்கட்சியின் இறுதி பயணமாக அமையும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிமீதே மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles