ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு தற்போது செயற்குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சி மறுசீரமைப்பு, அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு இக்கூட்டத்தில் இறுதி முடிவுகள் எட்டப்படவுள்ளன.
கட்சிக்கான பொதுச்செயலாளர் உட்பட நிர்வாகிகள் இதன்போது தெரிவுசெய்யப்படவுள்ளனர். எனினும், கட்சி தலைவர் மற்றும் பிரதித் தலைவர் பதவிகளில் எவ்வித மாற்றங்களும் வராது என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.தே.கவின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும், பிரதித் தலைவராக அவரின் உறவின் ருவான் விஜேவர்தனவும் செயற்படுகின்றனர். தலைமைப்பதவியை விட்டுக்கொடுப்பதற்கு தயார் என ரணில் முன்னதாக அறிவித்திருந்தாலும் தற்போது இழுத்தடிப்பு செய்துவருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.