ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி நாளை இலங்கை வருகை!

ரோமில் உள்ள ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியான சின்டி மெக்கெய்ன் (Cindy McCain) நாளை (25) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அவர் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்வதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார்.

கொழும்பிலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளையும் உதவிகளை வழங்கும் அமைப்புகளின் அதிகாரிகளையும் மெக்கெய்ன் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவருடன் மத்திய மாகாண பாடசாலைகள், விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளை சந்தித்து, மனிதாபிமான உதவித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் சிண்டி மெக்கெய்ன் ஆராயவுள்ளார்.

Related Articles

Latest Articles