ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19 இல் ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) ரி-20  தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘கொரோனா’வால் ஐ.பி.எல். போட்டி தொடரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானம் எடுத்திருந்தது. அதற்கான அனுமதியை மத்திய அரசாங்கத்திடம் கோரியிருந்தது.

இந்தநிலையில் இன்று காலை அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த வாரம் நடைபெறும் ஐபிஎல் நிர்வாக சபைக் கூட்டத்தில் அட்டவணை மற்றும் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படுவது குறித்த கூடுதல் விபரங்கள் விவாதிக்கப்படும்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்ட ஐ.பி.எல். கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

Related Articles

Latest Articles