ஒரே சூலில் அதிக பிள்ளைகளைப் பெற்ற சாதனையை தென் ஆபிரிக்க பெண் வசப்படுத்தியுள்ளார்.
37 வயதான இந்தப் பெண், ஏழு ஆண் பிள்ளைகளையும், மூன்று பெண்களையும் ஒரே தடவையில் ஈன்றெடுத்துள்ளார்.
இதுவரை ஒரே தடவையில் 9 பிள்ளைகளைப் பெற்றமையே உலக சாதனையாக இருந்தது. கடந்த மாதம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
”ஒத்த பிள்ளை பெத்துக்கிட்டு நாங்க படுற பாடு இருக்கே” என்று இக்காலத்தில் பெற்றோர் புலம்புவதை கேட்க முடிந்திருக்கும். இவர்கள் பத்து பிள்ளைகளை பராமரிப்பது என்பது ஒரு சவால் தான்!