ஒரே நாளில் இரு தேர்தல்கள் கோரிக்கையின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை ஒரே நாளில் நடத்தும் யோசனை ஏற்புடையது அல்ல. இந்த யோசனையின் பின்னணியில்கூட அரசியல் சுயநலனே உள்ளது – என்று சுதந்திர மக்கள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் டிலான் பெரேரா கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி, பொதுத்தேர்தல்களை ஒரே நாளில் நடத்த முடியும். எனினும், இலங்கையில் இதற்கு முன்னர் அவ்வாறு நடந்தது இல்லை. இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தினால் இரு வாக்குச் சீட்டுகளை வழங்க நேரிடும். ஒரு வாக்குச்சீட்டை வழங்கி தேர்தல் நடத்தப்படும்போதே நிராகரிக்கப்பட்ட வாக்குகளும் பதிவாகின்றன.

இந்நிலையில் இரு தேர்தல்கள் ஒரே தடவையில் நடத்தப்பட்டால் அது வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறு பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, மக்களை குழப்பும் நோக்கிலேயே இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுவருகின்றது.

மக்கள் ஆணையை திசை திருப்ப முற்படும் தரப்புகளே இந்த வேண்டுகோளை முன்வைத்துவருகின்றன. இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான காலப்பகுதி இதுவல்ல. எதிர்காலத்தில் வேண்டுமானால் உரிய ஏற்பாடுகளுடன் அவ்வாறு செய்யலாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles