ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான அறிவிப்பு

ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள நியமனம் செய்யும் நடவடிக்கை  மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அரச சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசவையின் செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரச சேவைகளில் வெற்றிடமாக  காணப்படும் பணிகளை கடமையிலுள்ள அதிகாரிகளை கொண்டு நிறைவெற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles