மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, அதற்குரிய தலைமைத்துவத்தை வழங்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தல் தொடர்பில் அவர் இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிவிப்பிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
” ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இரு பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்ற இந்த அரசாங்கம், 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற செய்தியை நாட்டு மக்கள் இத்தேர்தலின் ஊடாக முன்வைத்துள்ளனர்.” – எனவும் சஜித் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதித் தேர்தலை கையாண்டது போலவே இந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலையும் ஜே.வி.பி கையாண்டது. தேர்தலுக்காக மதம்கூட பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நாட்டு மக்கள் இப்போது பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். எனவே, பொய்களை முறியடித்து, உண்மையான பலம் வாய்ந்த மக்கள் சேவைக்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்புகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் இந்த சவாலான பொறுப்பிற்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.” – எனவும் சஜித் மேலும் குறிப்பிட்டார்.
