ஓரமாக போய் விளையாடுங்கள் – இதொகாவின் போராட்டம் குறித்து மனோ

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று போராட்டம் நடத்தும் நிலையில், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல், சிறுவர்கள் ஓரமாக போய் விளையாட வேண்டும் என மனோ கணேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் கூறியதாவது,

“ எனக்கு எதிராக சில மலையக நகரங்களில், இதொகாவின் சிறுவர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் செய்வதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், சிறுவர்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல், ஓரமாக போய் விளையாட வேண்டும் .

பட்டாசு கொழுத்தி, மண் சோறு பொங்கி, குழந்தைகள் ஆர்ப்பாட்ட விளையாட்டு விளை ஆடட்டும்.’’ – என்றார்.

Related Articles

Latest Articles