கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாளாந்தம் கடவு சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு 2 ஆயிரத்து 500 பேர் வரை முன்பதிவு செய்வதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரையான காலங்களில் வழங்கப்பட்ட கடவுசீட்டுக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் தற்பொழுதே அதிகமான கடவுசீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக எண்ணிக்கையிலானோர் கடவு சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு வருகின்றமையினால் பத்தரமுல்லையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles