கடும் வெப்பத்தால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அல்வாய் கிழக்கு, ஆண்டவர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத் தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை நேற்று சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது. கடுமையான வெப்பத் தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் அறிக்கையிட்டார்.

அதேவேளை, கடந்த வியாழக்கிழமை புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 44 வயதுடைய நபர் ஒருவரும் கடும் வெப்பத் தாக்கத்தால் உயிரிழந்திருந்தார்.

அத்துடன், அண்மைய நாட்களில் யாழ். போதனா வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வந்த ஐவர் “ஹீட் ஸ்ரோக்” ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலையின் பொது வைத் திய நிபுணர் வைத்திய கலாநிதி ரி.பேரானந்தராஜா ஊடக சந்திப்பில் தெரிவித் திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles