பயணக் கட்டுப்பாடுகள் நாளை தளர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்துகொள்ளுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனைத்தவிர, எந்தவொரு வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வீடுகளில் இருந்து ஒருவர் மட்டும் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்வது முக்கியமானது எனவும் ஒரே குடும்பத்தில் இருந்து இருவர் செல்வதன் மூலம் பயணக் கட்டுப்பாடுகளில் எவ்விதப் பயனும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாளை அதிகமான வீதிச் சோதனைகள் நடத்தப்படும் எனவும், சிவில் உடையிலும் பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.