கட்சி தாவல்களால் அதிரப்போகும் அரசியல் களம்!

தெற்கு அரசியலில் வெகுவிரைவில் ஏட்டிக்குப்போட்டியாக கட்சி  தாவல்கள்  சூடுபிடிக்கும்  என சிங்கள வார இதழ்கள் செய்தி  வெளியிட்டுள்ளன.

இதற்கான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும், கட்சிதாவும் காலப்பகுதி  பற்றி  ஆராயப்பட்டுவருகின்றது எனவும் தெரியவருகின்றது.

இதன்படி ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே தாவல்கள் பெருமளவில் இடம்பெறக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  சிலர், ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசுடன் இணையவுள்ளனர்.

அதேபோல ஆளுங்கட்சி பக்கம் உள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள்வரை ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

அத்துடன், சர்வஜன அதிகாரம் பக்கமும் சில எம்.பிக்கள் செல்லவுள்ளனர். மேலும் சிலர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

எனவே, கட்சி தாவல்கள் களைகட்டும் எனவும் சுமார் 40 வரையான எம்.பிக்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை மாற்ற திட்டமிட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles