எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பின்போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், அரசின் எதிர்காலச் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன என்று இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஹேரத் தெரிவித்தார்.
மக்களிடம் உண்மையை எடுத்துரைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது கூறினார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.










