ஐக்கிய தேசியக் கட்சியின் 77 ஆவது சம்மேளனம் செப்டம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான நிகழ்வுகளை பிரமாண்டமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தலைமையில் 14 பேரடங்கிய முகாமைத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, செயற்குழு உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பிடித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டுவிழா மற்றும் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இக்குழு முன்னெடுக்கும்.










