பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேற்படி நான்கு பொருட்களின் விலையும் அதிகரிப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு ஏற்கனவே வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாட்டு விலை தளர்த்தப்பட்டாலும் முறையற்ற விதத்தில்விலை அதிகரிப்புக்கு இடமளிக்கப்படமாட்டாது என இராஜாங்க அமைச்சல் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு உறுதியாகியுள்ளபோதிலும், எவ்வளவு ரூபாவால் அதிகரிக்கப்படும் என்பது தொடர்பில் நிதி அமைச்சுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் முடிவெடுக்கப்படவுள்ளது.










