கணவனை சரமாரியாக வெட்டிய மனைவி கைது!

கணவனுக்கும், மனைவிக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் உச்சம்தொட , ஆத்திரம் கொண்ட மனைவி, மரக்கறி வகைகள்வெட்டும் கத்தியை எடுத்து, தனது கணவனை பலமுறை குத்தியுள்ளார்.

இக்கொடூரச் சம்பவம் மொனராகலை, நக்கலவத்தை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

பலத்த கத்திக்குத்துக்கிலக்கான நபர், ஆபத்தான நிலையில் மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மொனராகலைப் பொலிசார், கத்திக்குத்துக்கிலக்கான நபரின் மனைவியைக் கைது செய்துள்ளதுடன், பயன்படுத்திய இரத்தம் தோய்ந்த நிலையிலான கத்தியையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டபெண்ணிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள்நி றைவுற்றபின்னர், அப்பெண் மொனராகலைம ஜிஸ்ரேட்நீதிமன்றத்தில்ஆஜர்செய்யப்படுவாரென்று, மொனராகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக்க கமகே தெரிவித்தார்.

எம்.செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles