லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கண்களுக்கு மிளகாய்தூள் தூவி, சினிமா பாணியில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
லுணுகலை, சிறிபாம் பகுதியில் இருந்து, சோலன்ஸ் தோட்டத்திற்கு சீட்டு காசு கொடுப்பதற்காக கைப் பையில் எடுத்துச் செல்லப்பட்ட 48 ஆயிரம் ரூபா பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பத்தினி கோவில் சந்தியில் வைத்து, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இருவர் தனது கண்களுக்கு மிளகாய் தூளை தூவிவிட்டு பணப்பையை திருடி சென்றதாக. லுணுகலை பொலிஸ் நிலையத்தில், பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார்.
பணத்தை பறிகொடுத்த நபர் 29 வயதுடைய சோலன்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு குறித்த நபர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ராமு தனராஜா










