கண்டியில் 2ஆம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுப்பு

கண்டி மாவட்டத்தில் 2ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று 18.06.2021 முதல் 21.06.2021 வரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று இ.தொ.காவின் உப செயலாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” இதன்போது 50000 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன . கடந்த வாரம் நடைபெற்ற கொவிட் குழு கூட்டத்தில் எமது பெருந்தோட்டத்தினைச் சார்ந்த மக்களையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தோம் . அந்தவகையில் நோய்தொற்று அதிகமாகவிருக்கும் பஸ்பாக கோரலை வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள நாவலப்பிட்டி பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது .

அதன்படி 20.06.2021 அன்று வெஸ்டோல் தமிழ் மகா வித்தியாலயத்தில், வெஸ்டோல் , ஹயிட்ரி , விக்டன் . டெம்பஸ்டோ , பார்கேபல் , கிரீன்வுட் , போகில் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

அன்றையதினம் இவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் , விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல் மற்றும் அனைத்துவிதமான வசதிகளும் எமது பிரஜாசக்தி அபிவிருத்தி திட்டத்தினூடாகவும் , அவ்வவ் பிரதேசங்களைச் சார்ந்த முன்கள பணியாளர்கள் மூலமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

ஆகவே இப்பிரதேசங்களைச் சார்ந்த 60 வயதுக்கு மேற்பட்டோர் தானாக முன்வந்து இத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். இத் தடுப்பூசிகள் பெற வழிகாட்டியாக செயல்பட்ட ஆளுநர் அமைச்சர்கள் சுகாதார பிரிவினருக்கு எம் நன்றிகள்.” – என்றார்.

 

Related Articles

Latest Articles