கண்டியில் 3 திருமணங்கள் – 600 பேர் பாதிப்பு – விசாரணை ஆரம்பம்!

கண்டி, அம்பிட்டிய பகுதியில் உள்ள பிரதான ஹோட்டலொன்றில் நடைபெற்ற சில திருமண நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் சுமார் 600 பேர் திடீரென சுகவீனமடைந்த சம்பவம் தொடர்பில் சுகாதார திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.

சில நாட்களுக்கு முன், குறித்த ஹோட்டலில் மூன்று திருமணங்கள் நடந்துள்ளன. அந்த மூன்று திருமணங்களிலும் கலந்து கொண்ட சுமார் 600 பேர் வாந்தி, பேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

இந்நாளில், கண்டியின் பிரபல வர்த்தகர் ஒருவரின் குடும்பஸ்தர் ஒருவரின் திருமண நிகழ்வும் ஹோட்டலில் இடம்பெற்றதுடன், தேனிலவுக்காக வெளிநாடு சென்ற தாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஹோட்டலில் உணவருந்தியவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும், ஹோட்டலின் நீரால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுவதால், ஹோட்டலின் நீர் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles