எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மொட்டு கட்சியின் கண்டி மாவட்ட கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த மற்றும் திலும் அமுனுகம உள்ளிட்டவர்களும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
கண்டி மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிமன்றங்களின் முன்னாள் தலைவர்களும், கட்சி பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்று, ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவை தெரிவித்தனர்.
கண்டி மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்தலில் மொட்டு கட்சிக்கு 8 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் இருவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர். எஞ்சிய அறுவரும் ஜனாதிபதிக்கே ஆதரவு என மஹிந்தானந்த குறிப்பிட்டார்.
