கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் செவ்வாய்க் கிழமை (27) கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பாபண்டார மற்றும் மத்திய மாகாண ஆளுநர் கௌரவ லலித் யூ கமகே தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் துறைசார் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்தல் தொடர்பாக மத்திய மாகாண ரீதியில் விசேட குழு ஒன்று ஸ்தாபிக்க பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி போன்று எதிர்காலத்தில் ஒரு நிலை ஏற்படாத வண்ணம் பாதுகாப்பது எமது கடமை எனவே அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் “சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல்” வேலைத்திட்டத்தினை நாம் ஆரம்பித்துள்ளோம்.
இதில் சிறுவர்களின் பாதுகாப்பு கல்வி மற்றும் திறன் சார் சமூகத்தை உருவாக்குவதே எமது நோக்கம்.
மேலும், மாணவர்களின் கல்வி, பாடசாலைகளை விட்டு மாணவர்கள் இடைவிலகல் போன்ற காரணிகளுக்கு பொருளாதார ரீதியாகவும், வளங்கள் ரீதியாகவும் அவர்களை பலப்படுத்தலை நாம் முன்னெடுக்க உள்ளோம்.
மேலும் இலவசமாக தொழில்நுட்ப கல்வியை வழங்கும் ஹட்டனில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி கல்லூரி போன்று கண்டி மாவட்டத்திலும் இவ் இவ்வருட இறுதிக்குள் நாம் நிர்மாணிக்க உள்ளோம்.
சுயதொழில் மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு வலயங்கள் ஊடாக வெளி மாவட்டங்களுக்கு இளைய தலைமுறையினர் புலம்பெயர்வதை குறைக்கும் பல வேலை திட்டங்களை நாம் முன்னெடுத்து உள்ளோம்.
மேலும் வீ ட்டு பணியாளர்களாக 18 வயதுக்கு குறைந்தோர் அமர்த்துவதை தடுக்கும் யோசனை ஒன்றை பாராளுமன்றத்தில் அமைச்சர் தலைமையில் பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர் அவர்கள் நேற்றைய தினம் (26/07/2021) நுவரேலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் ஆலோசனை வழங்கியதன் படி ஆளுநர் தலைமையில் மத்திய மாகாணத்தில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் பாடசாலைகளை விட்டு இடை விலகும் மாணவர்கள், கட்டாய வேலை மற்றும் வீட்டு பணியாளர்களாக அமரத்தப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராயும் விஷேட குழு ஒன்றை பொலிஸ் இராணுவம் அரச அதிகாரிகள் விடையதானம் தொடர்பான அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளடங்களாக ஆரம்பிக்க பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் ஊடாக மேற்றக்கொள்ளப்படும் திட்டங்களுக்கு தமது வரவேற்பை வழங்கியதுடன் அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புகளை வழங்குமாறும் பணித்தார்.
இக் கூட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திலக் ராஜபக்ச பேராசிரியர் ரஞ்சித் பண்டார மத்திய மாகாண செயலாளர் கண்டி மாவட்ட செயலாளர் திணைக்கள பிரதானிகள் பொலிஸ் இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்