கதிர்காமம் ஆடி வேல் விழா கொடியேற்றம் இன்று!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு இன்று 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற இருக்கின்றது.

கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக15 நாட்கள் திருவிழாக்கள், பெரஹரா இடம்பெற்று எதிர்வரும் 12-ஆம் திகதி கதிர்காமத்தில் தீர்த்த உற்சவம் இடம்பெறும்.

இதேவேளை, உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றமும் இன்று ஆலயபிரதம குரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது. உகந்தை முருகன் ஆலயத்தின் தீர்த்த உற்சவம் எதிர்வரும் 11-ம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

Related Articles

Latest Articles