கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்க்தோட்ட ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் இரண்டு அடி உயரம் கொண்ட வெள்ளியால் உருவாக்கப்பட்ட, உண்டியல் நேற்று (29) இரவு மர்ப நபர்களினால் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.
ஆலயத்தின் ஜன்னல் பகுதியூடாக உள்ளே சென்ற திருடர்கள் , ஆலயத்தின் உள்ளே காணப்பட்ட உண்டியலின் பூட்டை உடைத்து உண்டியலில் காணப்பட்ட பணத்தை களவாடி, உண்டியலை ஆலய வெளிப்பகுதியில் வீசியுள்ளனர்.
ஐந்து வருடங்களாக உண்டியல், ஆலய நிர்வாகத்தால் உடைக்கப்படவில்லை எனவும், எனவே, அதற்குள் பெருந்தொகை பணம் இருந்திருக்கலாம் எனவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கந்தப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
டி. சந்ரு










