கம்பளை , கம்பளவெல பகுதியிலுள்ள பாலம் உடைந்து சில வருடங்கள் கடந்துள்ளபோதிலும் புதிய பாலம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
கண்டி மாவட்டம், உடபளாத்த பிரதேசத்துக்குட்பட்ட கம்பளை நகர சபையையும், கங்கஹிகலகோரல பிரதேச சபைக்கு உட்பட்ட கம்பளவெல பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான பாலமே இவ்வாறு உடைந்துள்ளதால் – இரு பகுதிகளுக்கான தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
புதிய பாலத்தை அமைத்துதருமாறு மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தாலும் இன்னும் தீர்வு கிட்டவில்லை.
பாலம் உடைந்துள்ளதால் கம்பளவௌ, சாலியாவத்த, தும்முல்ல ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள் நெடுதூரம் நடந்துசென்றே நகரப்பகுதிக்கு வரவேண்டியுள்ளது. கடந்த ஆட்சியில்தான் எதுவும் நடக்கவில்லை. புதிய ஆட்சியிலாவது வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோருகின்றனர்.
மக்கள் செய்தியாளர் – பா. திருஞானம்