கருப்பின பெண் முதல்முறையாக நாட்டின் உயர்பதவிக்கு வந்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது என அமெரிக்க புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அதே வேளையில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதபிதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த அமெரிக்காவின் பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜோ பைடன் கமலா ஹாரிஸ் குறித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கருப்பின பெண் முதல்முறையாக நாட்டின் உயர்பதவிக்கு வந்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது. மிகச்சிறந்த பெண் துணை அதிபருடன் நான் பணியாற்ற உள்ளேன்.
குடிபெயர்ந்த பெண்ணின் வாரிசான கமலா ஹாரிஸ் முதன்முறையாக துணை அதிபராக தேர்வானதற்கு வாழ்த்துக்கள் எனக்கூறினார்.