கலஹா, அம்பிட்டிய பகுதிக்கு ஜீவன் களப்பயணம்: பிரச்சினைகள் குறித்தும் ஆராய்வு!

கண்டி, தெல்தோட்ட பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலஹா அம்பிட்டிய பிரதேச மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை நிவர்த்திக்கும் வகையில் களவிஜயத்தை மேற்கொண்ட நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.

அதேநேரத்தில் பிரதேச மக்களுக்கு குடிநீர் வழங்கும் கிணறுகள் மற்றும் குளங்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் அங்குள்ள குறைப்பாடுகளை கேட்டறிந்து நடவடிக்கையும் எடுப்பதாகவும் தெரிவித்தார் .

மேலும் இக்குடிநீர் திட்டத்தினை இலகுபடுத்துவதற்காக தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முன்னெடுப்பின் ஊடாக விரைவில் நிரைவுப்படுத்தி மக்களின் பாவனைக்காக நீர் வழங்கும் திட்டத்தினை செயற்படுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இந் நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜயரத்ன, தேசிய நீர்வளங்கள் வடிகால் அமைப்பின் உபதலைவர் சஞ்ஜீவ விஜயகோன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் மத்திய மாகானத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Latest Articles