களமிறங்குவாரா கோட்டா? மொட்டு கட்சி வெளியிட்ட அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நாம் நேரில் கலந்துரையாடியுள்ளோம். தனது எதிர்கால அரசியல் தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தவில்லை.

அவருக்கு மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை.

எனினும், பொதுஜன பெரமுனவுடன் ராஜபக்சக்களின் அரசியல் தொடரும்” – என்றார்.

Related Articles

Latest Articles