கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலைமூலம் களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 55 கர்ப்பிணி பெண்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இந்த தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் களுத்துறை மாவட்டத்தில் வேமாக பரவிவருவதால் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என வலியுறுத்தும் மேற்படி சங்கம், மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால் மாவட்டத்துக்குள்ளேயே உப கொத்தணிகள் உருவாகக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 448 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 164 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.