கள்ளக்காதலுக்காக குழந்தையை கொன்ற தாயும், கள்ள காதலனும் கைது! இந்தியாவில் கொடூர சம்பவம்…!

கள்ளக்காதலுக்காக குழந்தையைக் கொலை செய்த தாயும், இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

மலப்புரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (வயது 30). இவரது கணவர் மணிபாலன். இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை இருந்தது. இதற்கிடையே ஸ்ரீபிரியா தனது கணவரை பிரிந்து மகனுடன் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட திரூர் பகுதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளனர்.

இதையடுத்து அவருக்கும், தமிழகத்தை சேர்ந்த ஜெயசூர்யா (34) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் ஸ்ரீபிரியா, ஜெயசூர்யா ஆகிய 2 பேரையும் அதே பகுதியில் வைத்து உறவினர் ஒருவர் பார்த்து உள்ளார். அப்போது ஸ்ரீபிரியா கையில் குழந்தையை காணவில்லை.

குழந்தை எங்கே? என்று உறவினர் கேட்ட போது, ஸ்ரீபிரியா சரிவர பதில் அளிக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த உறவினர், இதுகுறித்து திரூர் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இதற்கமைய பொலிஸார் ஸ்ரீபிரியா, ஜெயசூர்யா ஆகிய 2 பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பொலிஸார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 11 மாத குழந்தையை கொல்ல முடிவு செய்தனர். பின்னர் அவர்கள் ஜெயசூர்யாவின் தாய், தந்தை ஆகியோர் உதவியுடன் குழந்தையை கொன்று உள்ளனர்.

இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக திருச்சூர் ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு பகுதியில் உடலை வீசி விட்டு, அங்கிருந்து தப்பி திரூருக்கு வந்தது தெரியவந்தது.n தாடர்ந்து ஸ்ரீபிரியா, ஜெயசூர்யா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் குழந்தை உடல் வீசப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த ஜெயசூர்யாவின் பெற்றோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Related Articles

Latest Articles