ஶ்ரீலங்கா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் தயாசிறி ஜயசேகர பங்கேற்றிருந்தார். கட்சி இனி ஒற்றுமையாக பயணிக்கும் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
