காசாமீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 90 பேர் பலி!

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 90 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாக்குதலில் 177 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த போரில் இது வரை உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது எனவும், 71 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கம் இடையே இடம்பெற்று வரும் போரானது சுமார் 5 மாதங்களாக நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles