காசாவில் இஸ்ரேல் கோர தாக்குதல்: 135 பேர் பலி!

காசா முழுவதும் இஸ்ரேல் நேற்று தாக்குதல்களில் 135 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 771 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193 ஐ எட்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5 பட்டினி மரணங்களை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க முடிவு செய்துள்ளார்.

ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா, நெதன்யாகுவின் நடவடிக்கை கவலையளிக்கிறது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.

தாக்குதலைத் தொடரலாமா வேண்டாமா என்பதை இஸ்ரேல் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் டிரம்ப் கூறினார். காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 61,158 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 151,442 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Articles

Latest Articles