காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை மையங்கள் தற்போது கொலைக்களங்களாக மாறி வருகின்றன.
முகாம்களை நோக்கி உணவு தேடி வரும் மக்கள்மீதும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன.
மே 27 முதல் ஜி.எச்.ஐ. முகாம்கள் நோக்கி வரும் மக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. 340 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் ஐந்து பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் தாக்குதலால் இதுவரையில் 54 ஆயிரத்து 418 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.