பாலஸ்தீன நகரமாக காசா மீது இஸ்ரேல் உக்கிர தாக்குதல் நடத்திவருகின்றது. இதனால் அங்கு வாழும் மக்கள் பட்டினி சாவையும் எதிர்கொண்டுள்ளனர்.
காசாவில் மக்கள் வசிக்கும் முகாம்கள், பாடசாலைகள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் அதே சூழலில் காசாவுக்குள் எந்த உணவும், உதவிப் பொருட்களும் செல்ல முடியாதபடி பார்த்துக்கொள்வதில் இஸ்ரேல் தீவிரமாக இருக்கிறது.
இதனால் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவில் 52 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 50 பேர் குழந்தைகள். இதற்கிடையில் மீன் பிடிக்க செல்லும் காசா மீனவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட பின் பட்டினியை போக்க காசா மக்கள் கரையொதுங்கும் கடல் ஆமைகளை உண்டு உயிரைப் பிடித்துக்கொண்டு இஸ்ரேலின் அடுத்த வான்வழித் தாக்குதல் எங்கு எப்போது நடக்குமோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.