காட்டு யானை தாக்கி ஆட்டோ சாரதி பலி

மஹியங்கனை சோரபொர ஏரி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நேற்றிரவு (18) ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனையில் இரவு முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரியும் சொரபொர ஏரி மஹியங்கனை இலக்கம் 26/3 இல் வசிக்கும் 61 வயதுடைய எம்.கருணாதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி இரவு, உயிரிழந்த நபருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில், சொரபொர ஏரியைச் சேர்ந்த ஒருவர் அவரை மஹியங்கனை நகருக்கு அழைத்து வருவதற்காக மஹியங்கனை நகருக்குச் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles