” கொழும்பிலுள்ள காணியை விற்றாவது தோட்ட மக்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தை கோரினர். எமது ஆட்சியின்கீழ் அதனை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
கிராம புறங்களில் வாழும் சிங்கள மக்கள்போன்று எல்லா வசதிகளையும் பெற்றவர்களாக தோட்ட மக்களும் வாழ வேண்டும். லயன் யுகத்திலிருந்து அவர்களை மீட்டு காணிகளை வழங்கி சொந்த வீடுகளை அமைத்துக்கொடுப்பதே எனது கனவு.
ஜேடிபி பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஈபிஎவ், ஈடிஎவ் மற்றும் சேவைக் கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, கொழும்பிலுள்ள அந்நிறுவனத்துக்கு உரித்தான காணியை விற்றாவது இக்கொடுப்பனவுகளை வழங்குவேன்.” – என்றார்.










