பிரேசிலைச் சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்.
பிரேசில் நாட்டை சேர்ந்த வயது 82 வயதுடைய பிரபல கால்பந்து வீரரான பீலே கடந்த வருடம் பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.
எனினும், கடந்த சில நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்துள்ளது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள வைத்தியாலையில் கடந்த மாதம் இறுதியில் பீலே சேர்க்கப்பட்டார்.
எனினும், புற்றுநோய் வேகமாக பரவியதால், நுரையீரல், இதய செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
21 வருட வாழ்க்கையில் 1,363 போட்டிகளில் 1,281 கோல்களை அடித்ததன் மூலம் உலக சாதனை படைத்தார், இதில் 92 போட்டிகளில் 77 கோல்கள் அடங்கும்.
1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர், பீலே 2000 ஆம் ஆண்டில் ஃபிஃபாவின் நூற்றாண்டின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.