பொருளாதார மறுமலர்ச்சி மையமாக மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை அமைக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் 22ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பிரதானமாக மீன்பிடித் துறையை மேம்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதற்கு முன்னர் கால்நடை வளர்ப்பு தொடர்பாகவும் பல கலந்துரையாடல்கள்கள் நடைபெற்றன.

இக்கூட்டத்தில் பிரதமர் எதிர்வரும் இரண்டு வருட காலத்தில் மக்களின் போசணையை அதிகரிப்பது உள்ளிட்ட விரைவான உணவு பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் ஆலோசனைகளை வழங்கினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன,
மீன்பிடித்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் போசணையை இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது. தைத்த ஆடை ஏற்றுமதி மட்டத்துக்கு மீன் உற்பத்தி ஏற்றுமதியையும் அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் உண்டு. மறுபுறம் பயிர்செய்கைக்கு தேவையான வசதிகளை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரச நிறுவனங்கள் முன் வர வேண்டும். கிராம சேவகர்கள் பிரிவுகளை கிராமிய பொருளாதார மையங்களாக வலுப்படுத்தி குறுகிய கால உணவுப் பிரச்சினையை தீர்த்து பின்னர் இந்த பொறிமுறையை நீண்டகால அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதற்காக அடிமட்டத்திலிருந்து பணிகளை ஆரம்பிப்பது இந்த கூட்டத்தின் நோக்கமாகுமென கூறினார்.










