2023 இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் நடத்தப்பட்ட (தரம் ஏ) கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் மலையகத்தை சேர்ந்த பீ.மோகன்ராஜ், ஆர்.தர்மலிங்கம் ஆகியோர் சித்தியடைந்துள்ளனர்.
ஹப்புத்தளை தம்பேதன்னை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரும் அரச அதிகரிகளாவர். அத்துடன், பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பீ.மோகன்ராஜ், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை நடுவர் போட்டி பரீட்சையில் சித்தியடைந்து கிரிக்கெட் நடுவராகவும் , இலங்கை கிரிக்கெட் ஸ்கோரர் ஆகவும் சேவையாற்றி வருகின்றார்.
இருவருக்கும் மலையக குருவியின் வாழ்த்துகள்…