ஹட்டன்- குடாகம பிரதேசத்தில் சிறுத்தையொன்று, உலவித் திரிவதால் பிரதேசவாசிகள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
6அடி நீளமான சிறுத்தை இரவு நேரத்தில் மக்கள் இருப்பிடங்களுக்கு வந்து செல்வதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் அவசரமாக வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பலரது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களும் காணாமல் போவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே குறித்த சிறுத்தையால் தமக்கு பாதிப்பு ஏற்படும் முன்னர், அதனைப் பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.










