குடும்பப் பெண் கொலை! தலவாக்கலைவாசி கைது!!

குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வெலிமடை – சாப்புகடே பகுதியில் குறித்த பெண் காணாமல்போனமை தொடர்பில் அவரது மகள் வெலிமடைப் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில், குறித்த பெண்ணின் சடலம் போர்வையால் சுற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தில் பாரிய வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன.

புரங்வெல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வேறு ஒருவருடன் ஹோட்டல் நடத்தி வந்தார் எனவும், அந்த நபருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அந்த நபரே பெண்ணை வெட்டிக் கொலை செய்துள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் தலவாக்கலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles