உள்ளாட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபை, கண்டி மாநகரசபை மற்றும் நுவரெலியா மாநகரசபை என்பவற்றுக்கு யானை சின்னத்தின்கீழ் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
சிறிகொத்தவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய சபைகளுக்கு கூட்டணி அமைத்து பொருத்தமான பொதுசின்னத்தின்கீழ் களமிறங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது. எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்.