உள்ளாட்சிமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்தான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இ.தொ.காவின் உயர்பீடம் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் கொட்டகலை சிஎல்எப்பில் கூடவுள்ளது. இக்கூட்டத்தின் பின்னரே இ.தொ.காவின் நிலைப்பாடு அறிவிக்கப்படவுள்ளது.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடக்கூடும் எனவும், சில பகுதிகளில் சேவல் சின்னத்தில் களமிறங்ககக்கூடும் எனவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசும், இதொகாவுடன் கூட்டணி அமைக்கவுள்ளார். அவரும் இன்று கொட்டகலை வரவுள்ளார் என உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் வடிவேல் சுரேஷ் தரப்பிலிருந்து இன்னும் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.










