குட்டி தேர்தலுக்காக உடைகிறது கூட்டமைப்பு – மூன்று கட்சிகளும் தனிவழி செல்ல முடிவு!!

உள்ளாட்சிமன்ற தேர்தலில் தனித்தனியே போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழுக் கூட்டம், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரின் இல்லத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜாவும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கேற்றிருந்தனர்.

புளொட்டின் சார்பில் ராகவன் பங்கேற்றிருந்தார். சுகயீனம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் பங்கேற்கவில்லை.

ரெலோவின் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது உள்ளாட்சிமன்ற தேர்தல், அரசுடனான பேச்சு உட்பட சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இதில் உள்ளாட்சி தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதற்கும், ஏனைய பங்காளிகள் தனிவழி செல்வதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

சிலவேளை புளொட், ரெலோ என்பன இணைந்து போட்டியிடக்கூடும். தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு, கைப்பற்றிய சபைகளில் ஆட்சி அமைப்பதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles