ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் நிராகரித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு முதல் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்தே நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொண்டார். எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் அம்பாந்தோட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் அவர் தோல்வியடைந்தார்.
அத்துடன், இம்முறை பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச போட்டியிடமாட்டார். கடந்தமுறை அவர் குருணாகலை மாவட்டத்திலிருந்தே நாடாளுமன்றம் தெரிவானார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அம்பாந்தோட்டையைக் கைவிட்டு குருணாகலை செல்கின்றார் நாமல் ராஜபக்ச எனவும் தகவல்கள் வெளியாகின.
