குளவிக்கொட்டு: பசறையில் அறுவர் பாதிப்பு

பசறை – டெமேரியா ஏ தோட்டத்தில் முதலாம் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 6 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

46,40,64,55 வயதுடைய நான்கு பெண்களும் 46,51 வயதுடைய இரண்டு ஆண்களுமே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.

டெமேரியா ஏ முதலாம் பிரிவில் இன்று காலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேளையில் குளவி கூடு ஒன்று கலைந்து இவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஆறு பேரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

ராமு தனராஜா

Related Articles

Latest Articles