தலவாக்கலை, அக்கரபத்தன எல்பியன் தோட்டத்தில் நியூபிரஸ்டன் பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே, குளவிகள் கொட்டியுள்ளன.
தொழிலாளர்கள் 15 பேரும் மன்றாசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11 பேர் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் எஞ்சிய 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.